கோவை: மகாவீர் ஜெயந்தி- டாஸ்மாக் கடைகள் மூடல்
நாளை மகாவீர் ஜெயந்தி கடைபிடிக்கப்படுவதால் கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.;

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அதுமட்டுமின்றி அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை கூடம் ஆகிய அனைத்து மது விற்பனை மையங்களும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விதிமுறைகளுக்கு மாறாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று தெரிவித்துள்ளார்.