கோவை: விஷப்பூச்சிகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம் !
கோவை வடக்கு தாலுகா அலுவலக வளாகம் புதர் மண்டி கிடப்பதால் பொதுமக்கள் அச்சம்.;

கோவை-பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கோவை வடக்கு தாலுகா அலுவலக வளாகம் புதர் மண்டி காணப்படுவதால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வருவாய்த்துறை, ஆதார் கார்டு பிரிவு, இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படும் இந்த வளாகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், புதர் மண்டிய பகுதியில் விஷ பாம்புகள் மற்றும் தேள் போன்ற விஷப்பூச்சிகள் நடமாடுவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கும் இந்த வளாகத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகளவில் மக்கள் வந்து செல்லும் இந்த அலுவலக வளாகத்தின் தற்போதைய நிலை வேதனை அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.