கோவை: கோவை வந்த மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்குக்கு வரவேற்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவைக்கு வருகை புரிந்தார்.;

Update: 2025-04-10 01:09 GMT
கோவை: கோவை வந்த மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்குக்கு வரவேற்பு
  • whatsapp icon
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கோவைக்கு வருகை புரிந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த அவரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விமான நிலையத்தில் முப்படை தளபதி, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் சூலூர் விமானப்படை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். அமைச்சரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக சூலூர் விமானப்படை தளத்தை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், ராஜ்நாத் சிங் அங்கிருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றார். அங்கு இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், அவர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சூலூர் விமானப்படை தளத்திற்கு திரும்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News