சீரான குடிநீர் விநியோகம்: வாலிபர் சங்கம் கோரிக்கை!
தூத்துக்குடி அருகே வடக்கு சிலுக்கன்பட்டி பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது;
தூத்துக்குடி அருகே வடக்கு சிலுக்கன்பட்டி பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி தாலுகா, வடக்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டி, மடத்துப்பட்டி, முத்துசாமிபுரம் பகுதியில் சுமார் 500 மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவசாயம், கூலி தொழிலாளிகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு குடிநீர் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. இதனால் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் ஒரு குடம் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்டுத்தும் நிலை நீடித்து வருகிறது. எனவே மக்கள் நலன்கருதி தினசரி குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் பாலமுருகன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் இ.சுரேஷ், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆவுடையப்பன், மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.