நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறையில் பிரிவு உபசாரவிழா!

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் கணினிதுறை அசோசியேஷன் சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.;

Update: 2025-04-10 02:18 GMT
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறையில் பிரிவு உபசாரவிழா!
  • whatsapp icon
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் கணினிதுறை அசோசியேஷன் சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். முன்னதாக கணினிதுறை பேராசிரியை ரெஜினா நிருபா ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவி பிரிசில்லா வேதபாடம் வாசித்தார். துறைத்தலைவர் பிரபாகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.  இவ் விழாவில் பருவ தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் கல்லூரியின் சிறப்புகள், படிக்கும் போது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளை எடுத்துக் கூறினர். பின்னர் இறுதி ஆண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  விழாவில் துறைத்தலைவர்கள் சோபியா, சிவமுருகன், பிரபாகர், சிவமுருகன், பிரபாகர் வேத சிரோமணி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி பர்சர் தனபால் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ் ஆலோசனையின் பேரில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் மற்றும் கணினி துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் செய்திருந்தனர்.

Similar News