கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

கோவை மாவட்ட CPI குழுவின் சார்பில் உக்கடம் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-10 02:43 GMT
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட CPI குழுவின் சார்பில் உக்கடம் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், நாட்டில் தேச ஒற்றுமை, நீடித்த அமைதி மற்றும் நாட்டின் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு, மசோதாவை திரும்பப் பெறாவிட்டால், அடுத்தடுத்து தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

Similar News