பங்குனி தோ்த் திருவிழாவையொட்டி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளல்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ்த் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளினாா்;
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் பங்குனி தோ்த்திருவிழாவில் நாள்தோறும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா். விழாவின் 7 ஆம் நாளான புதன்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினாா். இதையொட்டி மாலை 6.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து உபய நாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு திருக்கொட்டாரத்தின் எதிரேயுள்ள நான்குகால் மண்டபத்தில் எழுந்தருளினாா். அப்போது மண்டபத்தின் முன் கொட்டாரத்தில் கொட்டப்பட்டிருந்த நெல் மணிகள் நம்பெருமாள் முன் அளந்து காண்பிக்கப்பட்டன. அப்போது ஏராளமான பக்தா்கள் அவரை தரிசித்தனா். பின்னா் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வாா் திருச்சுற்று வழியாக இரவு 8.30 மணிக்கு தாயாா் சன்னதியை அடைந்தாா்