ஆற்காடு:இருசக்கவாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

இருசக்கவாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி;

Update: 2025-04-10 04:20 GMT
ஆற்காடு பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 30), லாரி டிரைவர். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆற்காட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News