புதிய பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த கனிமொழி எம்பி
புதிய பயணியர் நிழற்குடையை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.;
புதிய பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த கனிமொழி கருணாநிதி எம்.பி தூத்துக்குடி மாவட்டம் - கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், அச்சன்குளம் ஊராட்சி மீனாட்சி நகரில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டத்தின்கீழ் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.