மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-04-10 17:02 GMT
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!
  • whatsapp icon
தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் பாட்ஷா என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் செட் அமைப்பதற்காக இரும்பு கம்பியை மேலே ஏற்றும்போது மின்சாரம் தாக்கி ஆ சண்முகபுரத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் பரிதாபமாக பலி விபத்தில் காயம் அடைந்த 13 வயது சிறுவன் பாரூக் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி மத்தியபாகம் காவல்துறையினர் விசாரணை தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாட்ஷா சர்பத் வியாபாரம் செய்து இவரது வீட்டு மொட்டை மாடியில் இன்று செட் அமைப்பதற்காக இன்று மாலை தூத்துக்குடி அருகே உள்ள ஆ சண்முகபுரத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் கம்பியை மேலே மொட்டை மாடிக்கு ஏற்றியுள்ளனர் அப்போது மொட்டை மாடியில் இருந்து கம்பியை சௌந்தர்ராஜன் வாங்கியுள்ளார் இதில் இரும்பு கம்பி அருகே சென்ற மின்சார வயர் மீது உரசியதில் கம்பியில் மின்சாரம் பாய்ந்து சௌந்தர்ராஜன் மீது மின்சாரம் தாக்கியது இதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்ட சவுந்தர்ராஜன் பரிதாபமாக பலியானார் அப்போது அருகே இருந்த 13 வயது சிறுவன் பாருக்கின் கையில் மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்துள்ளார் இதை தொடர்ந்து அவரை தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Similar News