டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-11 00:49 GMT
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் விற்பனையாளர் நல சங்க கௌரவ தலைவர் அதிபதி தலைமை வகித்தார். இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை நடக்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி தர வேண்டும் பனி பாதுகாப்பு பணி நிரவல் ஆண்டுக்கு ஒரு முறை ஏ பி சி சுழற்சிமுறை இடமாற்றம் கோரிக்கைகள் டாஸ்மாக் நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும் காலி மதுபான பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை தனி ஒரு முகாமை மூலம் செயல்படுத்த வேண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே கடையில் பணிபுரியும் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடை சமூக பாதுகாப்பு கருதி இரவு பணி நேரத்தை இரண்டு மணி நேரம் குறைக்க வேண்டும் டாஸ்மாக் விற்பனை தொகையை சென்னையை போன்று அனைத்து மாவட்டங்களிலும் வங்கி மூலம் நேரடியாக வந்து வசூல் செய்ய வேண்டும் டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் மேலும் மருத்துவ காப்பீடு அட்டை இவர்களுக்கு வழங்க வேண்டும் டாஸ்மாக் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய முடிவுகளை எடுக்கும் போது தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் டாஸ்மாக் புதியதாக பணியாளர் தேர்வு செய்யப்பட்டால் இறந்த பணியாளர்களின் வாரிசுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் தினகரன் செயலாளர் செல்வம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சுகமதி அரசு பணியாளர் சங்க தலைவர் கோவிந்தராஜன் செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News