கீழ்பூரிக்கல் சிவாலயத்தில் குருவார பிரதோஷ சிறப்பு பூஜை
நல்லம்பள்ளி அருகே கீழ்பூரிக்கல் சிவாலயத்தில் குருவார பிரதோஷ சிறப்பு பூஜை, பக்தர்கள் சுவாமி தரிசனம்;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கீழ்பூரிக்கல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள 32 அடி சிவன் கோயிலில் தினசரி சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம் இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 10) குரு வார பிரதோஷத்தை முன்னிட்டு காலை முதலே சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது மாலை 5 மணி அளவில் வளாகத்தில் அமைந்துள்ள. நந்தி தேவருக்கு பால், தயிர், இளநீர், திருநீறு, பன்னீர், பஞ்சாமிர்தம், அபிஷேக பொடி, சந்தனம், குங்குமம், வில்வ இழைகள் உள்ளிட்ட 12 வகையான முக்கிய திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் நந்தி தேவருக்கு பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியை தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.