கோவை: போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கோரி மனு !
கோவை, கிங் ஜெனரேஷன் போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் கோரி மனு;
கோவை கிங் ஜெனரேஷன் கிறிஸ்டியன் பிரார்த்தனை கூடத்தின் போதகராக இருக்கும் ஜான் ஜெபராஜ், கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் விருந்து வைத்திருந்தார். அதில் கலந்துகொண்ட 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில், மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை போலீசார் பிறப்பித்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஜான் ஜெபராஜ் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நானும், என் மனைவியும் புற்றுநோய் பாதித்து வருகிறோம். என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் சிறுமிகளை வைத்து எனக்கு எதிராக பொய் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டேன். எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு வருகிற 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.