அமைச்சர் பொன்முடி அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாக பேசியது ஏற்புடையதல்ல

அமைச்சர் பொன்முடி அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாக பேசியது ஏற்புடையதல்ல;

Update: 2025-04-11 09:23 GMT
பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி அவர்கள் பெண்கள் பற்றிய ஆபாசமாக, அநாகரிகமாக பேசியதை கண்டிக்கிறோம். நீண்ட அனுபவம் பெற்ற மூத்த அமைச்சராக இருக்கிற ஒருவர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து கருத்துக்களை பொது கூட்டத்தில் பேசியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பேச்சு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு சங்கடத்தை கொடுத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது எந்த ஒரு சாராரும் மனம் புண்படுகின்ற அளவிற்கு பேசக்கூடாது. யாரும் எந்த இடத்திலும் யார் கவனத்திற்கும் செல்லாது என்று நினைப்பது கூட சமூக வலைத்தளங்களில் வந்துவிடும் என்கின்ற கவனம் வேண்டும். அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதிலோ எதிர் கருத்துக்களை பேசுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பயன்படுத்துகிற வார்த்தைகள் ஆபாசமாகவோ அடுத்தவர் மனதை புண்படுகிற விதத்திலோ இருக்கக் கூடாது. என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Similar News