நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்த எம்எல்ஏ
மதுரை சோழவந்தானில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி பப்பாளி வெள்ளரி போன்ற கோடை கால குளிர்பானங்கள் பழங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.