திருவிழாவில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் தவெகவினர்

அன்னசாகரம் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கிய தவெகவினர்;

Update: 2025-04-11 11:18 GMT
தர்மபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக பல்வேறு பகுதிகளில் கோடை டெய்லி சமாளிப்பதற்காக பொதுமக்களுக்கு நீர்மோர் வந்து அமைக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் சூழலில் இன்று ஏப்ரல் 11, தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் கிராமத்தில் தமிழக வெற்றி கழக நெசவாளர் அணியின் சார்பில் இன்று அன்னசாகரம் அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியை தமிழக வெற்றிக்கழக தர்மபுரி நகர செயலாளர் சிட்டி சுரேஷ் கிருஷ்ணா தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நெசவாளர் அணியைச் சேர்ந்த மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.

Similar News