தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் !

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சூலூரில் 10 இடங்களில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2025-04-11 12:09 GMT
தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞரணி சார்பில், தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சுராஜ் ஏற்பாட்டில், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.பி.பாபு தலைமையில் இன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. குறிப்பாக, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி, காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய 10 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், மேட்டுப்பாளையம் ஒன்றிய செயலாளர் மனோகரன், சூலூர் ஒன்றிய செயலாளர் வினோத் குமார், கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் கோகுல் கிருஷ்ணன், ஆனைமலை ஒன்றிய செயலாளர் அருண், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், மற்றும் சந்தியா, பிரியா உள்ளிட்ட மகளிர் அணியினர் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவை கழக நிர்வாகிகள் பரிமாறினர். இந்த அன்னதான நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Similar News