ராசிபுரத்தில் ஜமாத் சார்பில், வஃக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், ஒன்றிய அரசை திரும்ப பெற கண்டன ஆர்ப்பாட்டம்..

ராசிபுரத்தில் ஜமாத் சார்பில், வஃக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், ஒன்றிய அரசை திரும்ப பெற கண்டன ஆர்ப்பாட்டம்..;

Update: 2025-04-11 14:16 GMT
ராசிபுரத்தில் ஜமாத் சார்பில், வஃக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், ஒன்றிய அரசை திரும்ப பெற வலியுறுத்தியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்புக் கொடியுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - சேலம் சாலை ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பு ஜமாத் சார்பில், வஃக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், ஒன்றிய அரசை திரும்ப பெற வலியுறுத்தியும் ஜூம்மா தொழுகை முடிந்ததும் கருப்புக் கொடி மற்றும் பதாகை ஏந்தி பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாமியா மஸ்ஜித் முத்தவல்ல சாகுல் ஹமீது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் இமாம் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கருப்பு கொடி, பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்...

Similar News