கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த எம்எல்ஏ
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்கிய எம் எல் ஏ;
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகரம்,கெண்டிரச்சேரி, புதுப்பட்டு, சித்தண்டி, படாளம், மேலும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலை கடைகளை திறப்பதற்கு அனுமதி, ஏரிக்கறை மீது சாலை அமைத்தல், சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள சாலைக்கு மாற்றுசாலை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர், அதனை தொடர்ந்து, இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.