கோவை: விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் !

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.;

Update: 2025-04-12 01:09 GMT
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சோமனூரில் உள்ள யூனியன் வங்கி முன்பு நடைபெறும் போராட்டத்தில், 2022-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கூலியில் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி உயர்வை குறைக்காமல் வழங்க சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து விசைத்தறியாளர் பூபதி கூறுகையில், அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று கூலியை உயர்த்த வேண்டும் என்றும், கடந்த 22 நாட்களாக நீடிக்கும் போராட்டத்தால் 600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். விசைத்தறியாளர்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News