மருதமலை: பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் !

ஏழாம் படை வீடாக போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.;

Update: 2025-04-12 01:51 GMT
ஏழாம் படை வீடாக போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சமீபத்தில், கடந்த 4-ம் தேதி கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில், தற்போது 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று பங்குனி உத்திர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, நேற்று காலை முதலே மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். மண்டல பூஜை நடைபெற்று வருவதால், கடந்த சில நாட்களாகவே கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களின் வசதிக்காக இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தின் சார்பில் வாகனங்கள் மூலம் பக்தர்கள் மலைக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். பங்குனி உத்திர திருவிழாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர்.

Similar News