டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-12 04:17 GMT
டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு கோரியும், டாஸ்மாக்கில் மாற்றுத்திறனாளி பணியாளர்ளுக்கு பிறதுறையில் வழங்கும் சலுகைகள் வழங்கிட கோரியும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சிதம்பரம் நகர், பஸ்நிறுத்தம் அருகில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் மரகதலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயல்தலைவர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆர்ப்பாட்ட உரையாற்றினார். முன்னாள் பொதுச் செயலாளர் கு.கணேசன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ரவி, மாடசாமி, ஆவுடையப்பன், செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News