விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டுகள்: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
கோவில்பட்டியில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டுகள் வைத்தவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டுகள் வைத்தவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் போன்றவைகளால், சாலையினை பயன்படுத்துவோர் மற்றும் வாகன ஒட்டிகளிடம் கவன சிதறலை ஏற்படுத்துவதாலும் சாலையினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாலும் சாலைகள், பிளாட்பாரங்கள், நடைபாதைகள், போன்ற இடங்களில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், கோவில்பட்டியில் விதிமுறைகளை மீறி பல இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.