அரசு மருத்துவமனையில் டாக்டர் பணிமாற்றம் :கண்டன ஆர்ப்பாட்டம்!

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் டாக்டர் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-12 08:10 GMT
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் டாக்டர் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஆத்திக் குமார் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். மேலும் இரு மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்னொரு மருத்துவர் மாற்றுப் பணியிலும், மகப்பேறு மருத்துவர் வாரந்தோறும் ஒரு நாளும் வருகின்ரனர். . சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆதலால் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் வலியுறுத்தபட்டு வருகிறது.. இந்த நிலையில் சாத்தான்குளம் தலைமை மருத்துவர் மருத்துவர் ஆத்திக்குமார் பதவி உயர்வு பெற்றதையடுத்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமை மருத்துவர் பணி மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்கனவே சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை இருந்த நிலையில் மேலும் பற்றாக்குறை உண்டாகி பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் மருததுவர் ஆத்திக்குமார் பணி மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், டாக்டர் ஆத்திக்குமாரை மீண்டும் சாத்தான்குளம் தலைமை மருத்துவராக நியமிக்க கோரியும், சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு, குழந்தை, எலும்பு முறிவு பிசியோதெரபி உள்ளிட்ட பிரிவு மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் செவிலியர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என வலியறுத்தி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் புதுக்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலமேலன், தென்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் லூர்து மணி, ஒன்றிய ஜெ, பேரவை தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Similar News