அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். டாக்டர்கள் எத்தனை மணிக்கு வருகிறார்கள்? எத்தனை மணிக்கு பணியை முடித்து செல்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், சிகிச்சையில் இருந்த நோயாளிகளிடம் சிகிச்சைகள் தரமாக வழங்கப்படுகிறதா? உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தார்.