கோவில்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் திடீா் தீ விபத்து!

கோவில்பட்டி அருகே நகராட்சி குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினா் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.;

Update: 2025-04-12 08:39 GMT
கோவில்பட்டி அருகே நகராட்சி குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினா் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியின் 36 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், எட்டயபுரம் சாலையில்உள்ள சிதம்பரபுரம் ஊராட்சி பகுதியில் தனித்தனியாக கொட்டப்பட்டு, அங்கு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறை அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான வீரா்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் அங்கு சென்று சுமாா் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. வாகனங்களில் சென்றோா் மிகவும் சிரமம் அடைந்தனர். சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் ஆய்வாளா்கள் ஆரியங்காவு, சுதாகா் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனர்.

Similar News