கோவை: விசைத்தறியாளர் போராட்டத்திற்கு வி.பி கந்தசாமி ஆதரவு !
விசைத்தறியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சூலூர் தொகுதி எம்எல்ஏ வி.பி. கந்தசாமி இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.;
கோவை மாவட்டம் சோமனூரில், கூலி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை வலியுறுத்தி கடந்த 23 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சூலூர் தொகுதி எம்எல்ஏ வி.பி. கந்தசாமி இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், அரசு உடனடியாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தானும் பங்கேற்பேன் என்று கூறினார் எச்சரித்தார். இந்த கோரிக்கைகளை மீண்டும் சட்டமன்றத்தில் எழுப்ப கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.