புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா

எர்ரப்பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர்;

Update: 2025-04-12 09:22 GMT
தருமபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி எர்ரப்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 17.30/- இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் ஒரு வகுப்பறை கட்டிட விழா இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் பின்னர் பள்ளி குழந்தைகளிடையே உரையாடினார் சிறு வயது முதலே நன்கு படித்து உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்து அதற்காக உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர் சொல்படி கேட்டு வாழ்க்கையில் சிறந்த விளங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் பின்னர் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார் இந்த நிகழ்வில் துறை சார்ந்த அரசியல்வாதிகள் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News