சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் தி.மு.க. பாக முகவர்கள், பூத் கமிட்டி கூட்டம்
கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடக்கிறது;
ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான தி.மு.க. பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை தாங்குகிறார். வாழப்பாடி வடக்கு, தெற்கு, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஆகிய ஒன்றியங்கள், வாழப்பாடி, பேளூர் ஆகிய நகரங்களுக்கு உட்பட்ட பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் வாழப்பாடி தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இதேபோன்று அயோத்தியாப்பட்டணம் தெற்கு, வடக்கு, பேரூர் பூத் கமிட்டி, பாகமுகவர்கள் கூட்டம் மதியம் 3 மணிக்கு அயோத்தியாப்பட்டணம் கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.