சேலம் கருப்பூரில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-04-12 10:04 GMT
சேலம் கருப்பூர் கொல்லத்தெருவை சேர்ந்த குப்பன் மகன் புகழேந்தி (வயது 27). இவர், கருப்பூர் மகளிர் தொழில் பூங்கா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று அப்பகுதியில் நடந்த கோவில் விழாவில் இரவு நடந்த நடன நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துவிட்டு கருப்பூர் பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக ெரயில்வே இரும்புச் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது இரவு 10.20 மணி அளவில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் பயணிகள் ெரயில் புகழேந்தி மீது மோதியது. இதில் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் புகழேந்தி இழுத்துச் செல்லப்பட்டு உடல் சிதறி பலியானார். இதுதொடா்பாக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பலியான புகழேந்தி உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News