சேலம் புளியம்பட்டி புதுகாலனி பகுதியை சேர்ந்த கோபால் மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 32), இவர் நேற்று காலை இரும்பாலை அருகில் உள்ள மாரமங்கலத்துப்பட்டி செல்லப்பாநகரில் புதிய கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சென்டிரிங் பொருட்களை கட்டிடத்தின் மேல் பகுதிக்கு கொண்டு சென்ற போது திடீரென அந்த வழியாக சென்ற மின்சார ஒயரில் பட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி கோகுலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் விரைந்து வந்து கோகுலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.