விளையாட்டு போட்டிகளில் சாதித்த மாணவிகளுக்கு
கலெக்டர் பிருந்தா தேவி வாழ்த்து;
சர்வதேச அளவிலான பாரா தடகளப்போட்டி, தேசிய மற்றும் கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டி, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் காந்திமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.