எம்எல்ஏ தலைமையில் இலவச மருத்துவ முகாம்
பொய்ப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்;
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்யப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு மகா காளியம்மன் 48வது தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று ஏப்ரல் 12 விஜய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஜெய் பீம் மகளிர் மன்றம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் அரூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகமை துவங்கி வைத்து அவரும் பரிசோதனைகள் செய்து கொண்டார். மேலும் இந்த முகாமில் ரத்த சர்க்கரை அளவு, சுருள்படம் தேவையோ அவர்களுக்கு (இசிஜி) மற்றும் ரத்த கொதிப்பு பரிசோதனை, ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.