மாணவர்களின் வருகையை அதிகரிக்க பாதுகாப்பு மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்

மாணவர்களின் வருகையை அதிகரிக்க பாதுகாப்பு மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுத்தப்பட்டது.;

Update: 2025-04-12 11:12 GMT
அரியலூர் ஏப்.13- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம். விளந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் பார்வையிட்டார். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டம் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி ஆயத்தப் பயிற்சி மையத்தை பார்வையிட்டதில் இன்றைய பணி சிறப்பு பயிற்றுநர் ஸ்ரீபிரியா, மைய பொறுப்பாளர் பவானி, பாதுகாவலர் ஜெயம் ஆகியோர் பணியில் இருந்தனர். மாணவர்களுக்கு அன்றாட வாழ்வியல் திறன்பயிற்சி,எளிய முறை வாழ்வியல் சார்ந்த கணிதம் அடிப்படை செயல்பாடுகள், நிறங்கள்,திசைகள் பற்றிய பயிற்சியை சிறப்பு பயிற்றுநர் ஸ்ரீபிரியா அவர்கள் மைய பொறுப்பாளர், மாணவர்களுக்கு அளித்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு,முட்டை உணவுகளின் சுத்தம்,தரம் ஆகியவை பற்றி மாணவர்களிடம் கேட்டறியப்பட்டது. கட்டிட நிலை பழுதி நீக்கம் பணி பற்றி கேட்டறிந்தார். மாணவர்களின் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி கழிப்பறை பயன்பாடு பற்றி கேட்டறிந்தார். மாணவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு பொருட்கள், பயிற்சி பொருட்கள், புதிர்பந்து,பேச்சுப் பயிற்சி,கண்ணாடி பயன்பாடு,சிறிய இசைக்கருவிகள் பயனபாடு,இருப்பு பதிவேடு பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து மாணவர்களின் வருகையை அதிகரிக்க மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Similar News