சாலையோரம் இன்று காரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
குண்டலபட்டி பகுதியில் சாலையோரம் இன்று காரில் 140 கிலோ புகையிலை பொருட்கள் காவலர்கள் பறிமுதல்;
தர்மபுரி அருகே குண்டல்பட்டி பகுதியில் மதிகோன்பாளையம் காவலர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் சாலை ஓரத்தில் நின்றிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது அந்த கார் மீது சாலையில் வந்த இரண்டு கார்கள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை லேசாக மோதி இருப்பது தெரிய வந்தது.இந்த விபத்தில் சிக்கிய அந்த காரில் யாரும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் காரின் கதவை வை திறந்து சோதனை செய்தனர். அப்போது அந்த காருக்குள் 140 கிலோ 140 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் (கூல் லிப் பாக்கெட்டுகள்) இருந்தன. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இந்த போதைபொருட்களை கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதிகோன் பாளையம் காவலர்கள் அந்த காரில் கூலிப் பாக்கெட்டுகளை கடத்தி வந்தவர்கள் யார்..? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.