புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை
மதுரையில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.;
மதுரை வடக்கு மாவட்டம் , மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண்- 72 முத்துராமலிங்கபுரம்,பைக்காரா இபி காலனி, வார்டு எண் -73 அழகப்பன் நகர் மெயின் ரோடு அன்னை தெரசா கல்லூரி வாசல் அருகில், வார்டு எண்- 74 பசும்பொன் நகர், வார்டு எண்- 78 ஜேசு மஹால் ரோடு, வார்டு எண் -79 ஜீவா நகர் 1வது தெரு ஆகிய இடங்களில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை இன்று (ஏப்.12) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் மேயர் இந்திராணி, மாநகராட்சி அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.