வீட்டில் புகுந்த திருடன்,பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் புகுந்த திருடன்,பெண்ணிடம் நகை பறிப்பு;

Update: 2025-04-12 11:53 GMT
கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார், மகிஷ்மதி கார்டன், பிரகஸ்வதி குடியிருப்பின் தரைத் தளத்தில் வசிப்பவர் வினோத்குமார், 39; கார் ஓட்டுனர். இவருடன் மனைவி மம்தாஸ்ரீ, தாயார் வளர்மதி, தங்கை சிவசக்தி மற்றும் குழந்தை ரயவான் ஆகியோர் வசிக்கின்றனர்.நேற்று அதிகாலை 5:30 மணியளவில், முகமூடி அணிந்த மர்ம நபர், வினோத்குமாரின் வீட்டுக் கதவை இரும்பு கம்பியால் பிளந்து, உள்ளே நுழைந்துள்ளார்.பின், உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி மம்தாஸ்ரீ அணிந்திருந்த தாலிச் செயினை பறித்துள்ளார். அப்போது அவர் அலற முற்பட்ட போது, கொலை செய்துவிடுவதாக மிரட்டி, அவர் அணிந்திருந்த நான்கு சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இச்சம்பவம் குறித்து, வினோத்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News