இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது;
செங்கல்பட்டு மாவட்டம்,செம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 45.கடந்த 9ம் தேதி, 'டி.வி.எஸ். எக்ஸ்.எல்.,' ஸ்கூட்டரை, செம்பூண்டி - எல்.எண்டத்துார் சாலையில் நிறுத்திவிட்டு, கிளியாறு பகுதிக்குச் சென்றுள்ளார். பின், மீண்டும் வந்து பார்த்த போது, ஸ்கூட்டர் திருடுபோனது தெரிந்தது இதுகுறித்து, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், மதுராந்தகத்தைச் சேர்ந்த ராஜா, 25, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.பின், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.