ராசிபுரம் அருகே நண்பரின் முன் பகையால் தறி தொழிலாளியை திருவிழாவில் குத்திக்கொன்ற உறவினர்...
ராசிபுரம் அருகே நண்பரின் முன் பகையால் தறி தொழிலாளியை திருவிழாவில் குத்திக்கொன்ற உறவினர்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் என்பவர் மகன் கார்த்திகேயன்(45) இவர் வீட்டிலேயே தறி தொழில் செய்து வரும் நிலையில் இவரது நண்பரான ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்களாந்தபுரம் பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் கிராம மக்கள் சாமி தரிசனம் மற்றும் கோவில் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் சுந்தர்ராஜன் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் அப்போது கார்த்திகேயன் இடை நின்று தகராறு முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.இருந்த போதிலும் ராதாகிருஷ்ணனுக்கும் சுந்தரராஜனுக்கும் முன் பகை காரணத்தால் தற்போது திருவிழா நடைபெறும் நேரத்தில் ராதாகிருஷ்ணன் கொன்றுவிடுவதாக சுந்தர்ராஜன் கார்த்திகேயனிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனை கார்த்திகேயன் அவரது நண்பரான ராதாகிருஷ்ணன் இடம் கூறியதால் மீண்டும் ராதாகிருஷ்ணன் மற்றும் சுந்தர்ராஜனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கார்த்திகேயனை சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் மயங்கி விழுந்ததை அடுத்து உறவினர்கள் கார்த்திகேயனை மிட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பவம் தொடர்பாக பேளுக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தரராஜனை தேடி வருகின்றனர்.கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு உறவினரை கோவில் திருவிழாவில் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..