பட்டியலின மக்களுக்கு இந்து அறநிலைத்துறை சாமி தரிசனம் செய்ய அனுமதி: மக்கள் மகிழ்ச்சி...
பட்டியலின மக்களுக்கு இந்து அறநிலைத்துறை சாமி தரிசனம் செய்ய அனுமதி: மக்கள் மகிழ்ச்சி...;
பட்டியலின மக்களுக்கு இந்து அறநிலைத்துறை சாமி தரிசனம் செய்ய அனுமதி: மக்கள் மகிழ்ச்சி... 800 வருடங்களுக்குப் பிறகு கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் கட்டளை பெறுவதற்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு இந்து அறநிலைத்துறை அனுமதி வழங்கியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சுமார் 800 வருடங்களுக்கு முன்பு தோன்றிய ஸ்ரீதுலுக்க சூடாமணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல வருடங்களாக பட்டியலின மக்களுக்கு கட்டளை அனுமதிக்கப்படவில்லை இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் மைய மாவட்ட செயலாளர் பெரியசாமி(எ) நீலவானத்துநிலவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கத் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வருடத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பு அனைத்து மக்களுக்கும் கட்டளையில் பங்கு பெறலாம் சாதி பெயரைச் சொல்லி யாரும் கட்டளை நடத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை அடுத்து புதுப்பட்டி அம்பேத்கர் நகர் பொதுமக்கள் இந்த வருடம் கோவில் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்தனர். மேலும் இதனால் ஊர் பொதுமக்கள் இந்து அறநிலை துறைக்கும், வருவாய்த்துறைக்கும், சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் அப்பகுதி மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். மேலும் கோவிலில் அனைவரும் சமமாக நடத்த சாமி தரிசனம் செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கத் தொடர்ந்து இதனைப் பெற்றுத் தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் மைய மாவட்ட செயலாளர் நீலவானத்துநிலவன் அவர்களுக்கு நன்றியும், பாராட்டு தெரிவித்து அப்பகுதி மக்கள் அவருக்கு பேனர், வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..