வக்ஃப் திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காயல்பட்டினத்தில் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2025-04-13 02:56 GMT
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அல்ஜாமில் அஸ்கர் ஜூம்மா பள்ளிவாசல் முன்பு வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காயல்பட்டினத்தில் அல் ஜாமிஉல் அஸ்கர் ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வெளியே வந்தனர். அனைவரும் பள்ளிவாசல் முன்பு கூடினர். அங்கு, முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் வக்புவாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், மத்திய பா.ஜனதா ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பிவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய பேரவை, த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், எஸ்.டி,பி,ஐ. ம.ஜ.க., கட்சி நிர்வாகிகள், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News