கோவை: ஆட்டிசம் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு காணொளி வெளியீடு
கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில், ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், தர்ட் ஐ அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு காணொளி வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.;

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சுற்றி இருப்பவர்கள் அவர்களை ஒதுக்கி வைக்காமல், அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று நடிகை கௌதமி கோவையில் தெரிவித்தார். கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில், ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், தர்ட் ஐ அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு காணொளி வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காணொளியை வெளியிட்டார். நிகழ்ச்சியின் தொடக்கமாக, சிறப்பு குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் இணைந்து நடனமாடியும், ராம்ப் வாக் எனப்படும் மேடை நடை செய்தும் அனைவரையும் அசத்தினர். அவர்களின் திறமையைக் கண்டு வியந்த நடிகை கௌதமி, ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகளை வழங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.