சவேரியார் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு
கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு;
இன்று உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு தினத்தை கடைப்பிடிக்கின்றனர். இன்று முதல் புனித வாரம் தொடங்குகிறது. இந்த நிலையில், நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுமார் 375 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் திருத்தலம் அமைந்துள்ளது. இன்று ஏப்ரல் 13 காலை 7.30 மணியளவில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில், உதவி பங்குத்தந்தை பெனடிக் முன்னிலையில் நிர்மலா மையத்தில் இருந்து வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் குருத்து ஓலைகளை கைகளில் ஏந்தி ஓசன்னா தாவீதின் மகனுக்கு ஓசன்னா.. என்று பாடல் பாடி சிறப்பு திருப்பலி வழிபாட்டில் பங்கு பெற்றனர்.