வரதராஜன் பேட்டையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவணி
வரதராஜன் பேட்டையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவணி நடைபெற்றது;
அரியலூர் ஏப்.14- கிறிஸ்தவர்களின் தவக்காலம் மார்ச் 5 சாம்பல் புதனுடன் தொடங்கி 40 நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வாரத்தில் தொடக்கமாகவும் குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேம் நகருக்குள் ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்)க்கு முந்தைய ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் அனுசரிக்கப்பட்டது. வரதராஜன் பேட்டை பங்கு தந்தை பெலிக்ஸ் சாமுவேல் தலைமையில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைஞாயிறு பாடல்களை பாடிக்கொண்டே குறித்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அலங்கார அன்னை ஆலயத்திற்கு வந்தனர். குரு தோழன் ஞாயிறு தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது வரதராஜன் பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.