சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்திரம் பழுது

குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி ஒரே நடவடிக்கை எடுத்து மீண்டும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகளை;

Update: 2025-04-13 16:35 GMT
  • whatsapp icon
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் கிராம ஊராட்சி மூலமாக செங்குணம் அண்ணா நகரில் குடிநீர் கிணற்றுடன் கூடிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி வளாகத்தில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ 8 லட்சம் மதிப்பில் புதியதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது . மையத்தின் ஒரு கருவியில் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி பாத்திரத்தில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தின் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வருவதில்லை. இதனால் ஏற்கனவே இம்மையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்திய பலரும் தற்போது குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். எனவே சுத்திகரிக்கப்பட்ட மையத்தில் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News