புதுக்கோட்டை: குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் வேளாண்பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப்பயணமாக திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்துக்கு சென்றனர். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்று நடுதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர். ஆசிரியர் குமார், வேளாண் கல்லூரி மாணவிகள் மரக்கன் றுகளை நடவு செய்து, மரங்களை வளர்த் தல், பாதுகாத்தல் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். ஆசிரியர் கார்த்திகேயன் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். பேராசிரியர் பொற்கொடி தென்னை டானிக்கின் நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி பேசினார். கருமலை ஊராட்சி அலு வலகத்தில் பண்ணை பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வேளாண் அலுவலர் அருண் ஜூலியஸ், துணை வேளாண் அலுவலர் வேல்முரு கன் ஆகியோர் இணைந்து காடுகள் வளர்ப்பு குறித்தும், கால்நடை டாக்டர் சுரேந்திரன், கால்நடை பராமரிப்பு, செயற்கை கருத்தரிப்பு குறித்தும் விளக்கி கூறினர். தென்னையில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈயின் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறைகள் பற்றி விவசாயிகளுடன் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவி ஸ்ரீமதி உள்ளிட்டோர் கலந்து ரையாடினர்.