திருச்செந்தூர் கடலில் மூழ்கிய பக்தர் உயிருடன் மீட்பு
திருச்செந்தூர் கடலில் மூழ்கிய பக்தர் உயிருடன் மீட்டனர்;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடலில் மூழ்கியதில் கடலுக்கடியில் ஆபாத்தான நிலையில் இருந்த பக்தர்கள்- மீட்டெடுத்து உயிர்க்கொடுத்த கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிப்பட வருகை தந்தனர். அவ்வாறு வருகை தந்த பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்பு மூலவரான முருகனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கடலில் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் என்பவரின் மகன் சந்திரன் வயது 55 இவர் தனது உறவினர்களுடன் கடலில் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஆழமான பகுதியில் சிக்கி கடல் நீரில் மூழ்கினார். அவருடன் வந்திருந்த உறவினர்கள் திடீரென குளித்து கொண்டிருந்த சந்திரனை காணவில்லை என பதப்பதைத்தனர்.ஒரு சில மணி நேரம் உறவினர்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால்,உடனடியாக கோவில் அருகே இருந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்தனர். விவரம் அறிந்த கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் சிவராஜா, ஆறுமுகநயினார், சர்வேஸ்வரன் இசக்கி விக்னேஷ் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் ஆகியோர் கடலுக்குள் இறங்கி பக்தரான சந்திரணை மூழ்கி தேடினர். அப்பொழுது கடல் நீர் அதிகமாக குடித்த நிலையில் கடலுக்குள் அடியில் மூழ்கி கிடந்த சந்திரனை மீட்டெடுத்து , கொண்டுவந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் நீண்ட நேரம் ஆகியும் கண் முழிக்காத சந்திரனை கண்டவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக எண்ணிய நிலையில் கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் முழு வீச்சில் முயற்சி எடுத்தத்தில் அதன் விளைவாக கோவில் முன்பு சந்திரணை தூக்கி செல்லும் வேளையில் திடீரென்று சந்திரன் கண் விழித்தார். விரைந்து திருக்கோவில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் சந்திரனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு சிகிச்சை அளிக்க உதவி செய்தனர்.அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது. பக்தர் ஒருவர் கடலில் முழ்கி ஆபாத்தான நிலையில் இருந்தவரை கடலுக்குள் மீட்டெடுத்து உயிர்பிழைக்க வைத்த கடலோர பாதுகாப்பு குழுவினர்க்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றது