கஞ்சா கும்பலை பிடித்த போலீசாருக்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
புகையிலை, போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக தகவல் கொடுப்போருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்;

திருச்சி பெல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10-ந்தேதி திருவெறும்பூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு தலைமையி லான தனிப்படை போலீசார் கைலாசபுரம், டவுன்சீப் குடியிருப்பு பகுதி யில் கஞ்சா விற்றதாக நரேஷ் ராஜ் (வயது 26) என்பவரை கைது செய் தனர். அவரிடம் இருந்து 2 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டது. அதேபோல் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி அருகில் ஸ்கூட்ட ரில் கஞ்சா கடத்தி வந்த இரட்டைவாய்க்கால் பகுதியை சேர்ந்த சதீஸ் குமார் (29), தென்னூர் பகுதியை சேரந்த முகமது இசாக் (28) ஆகி யோரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கும்பலை பிடித்த போலீசாருக்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தி னம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கினார். மேலும், புகையிலை, போலி மதுபானம், 'கள்', போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டின் உதவி எண் 89391 46100 மற்றும் மாவட்ட போலீஸ் கட்டுப் பாட்டு அறை எண் 0431-2333621 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக் கலாம். சரியான தகவல் கொடுப்போருக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டால் "பாராட்டு சான்றிதழ்" வழங்கப்படும் எனவும் தகவல் கொடுப் போரின் பெயர், முகவரி ரகசியம் காக்கப்படும் எனவும் போலீஸ் சூப்பி ரண்டு தெரிவித்துள்ளார்.