புதிய ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையம் திறப்பு விழா

திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கி ணைந்த நோயறிதல் மற்றும் இமேஜிங் மையமான நியூபெர்க் மேக்னம் அமைக்கப்பட்டுள்ளது;

Update: 2025-04-15 04:49 GMT
புதிய ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையம் திறப்பு விழா
  • whatsapp icon
மருத்துவ டயக்னாஸ்டிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் நியூ பெர்க் டயக்னாஸ்டிக்ஸ், மேக்னம் இமேஜிங் மற்றும் டயக்னாஸ்டிக்ஸு டன் இணைந்து திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கி ணைந்த நோயறிதல் மற்றும் இமேஜிங் மையமான நியூபெர்க் மேக்னம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கி ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையத்தையும் மற் றும் 14 புதிய கிளை மையங்களையும் இணையவழி மூலம் திறந்து வைத்தார். இந்த கிளைகள் கே.கே.நகர், புதுக்கோட்டை, டி.வி.எஸ். டோல் கேட், பெரம்பலூர், அரியலூர், துறையூர், திருவண்ணாமலை, ராமலிங்கம் நகர், தில்லைநகர், மணப்பாறை மற்றும் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டு, மக்கள் மிக எளிதாக தரமான டயக்னாஸ்டிக் சேவைகளைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில், திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார், மருத்துவ இயக் குனர் டாக்டர் ஜி.எஸ். கோபிநாத், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களா கக் கலந்து கொண்டனர். மேலும், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவ னத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு, நியூபெர்க் மேக்னத்தின் நிறுவனரும், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ரேடியாலஜி துறைத் தலைவருமான டாக்டர் பவாஹரன் ராஜலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News