கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-16 09:42 GMT
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டபணியாளர்களுக்கு 3 மாதமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால் இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் குடும்ப சூழ்நிலை மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. வயதானவர்கள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். 2025 ஆம் ஆண்டிற்கு நூறு நாட்கள் முழுவதுமாக வேலை வழங்க வேண்டும். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி சுமார் ரூ 3 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும்.என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எழுச்சி பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதிசிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் |மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனியம்மாள். கவிதா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ் வெங்கடாசலம், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள்பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இறுதியாக கட்சியின் மூத்த தோழர் பெரியசாமி நன்றியுரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.

Similar News